Saturday, 31 December 2011


புகழ்பெற்ற ஆங்கில நாளிதழ் டெக்கன் க்ரானிகல் நம் கவித்துளி இதழ் குறுத்தும் அதன் ஆசிரியர் கவித்துளி மு.குமார் குறித்தும் வெளியிட்ட செய்தி...

Sunday, 3 July 2011






நாற்காலி இல்லா
சிம்மாசனம்
தாயின் கருவறை

கவிஞர் மாரிமுத்து
ராஜபாளையம்






மலிவு விலையில்
அழகு சாதன்ப்பொருள்
புன்னகை

கவிஞர் செல்வம்
தேனி






உனக்கும் எனக்குமான‌
சந்தோச மொழி
அன்பு

கவிஞர் துளிர்
மதுரை






இரண்டு குவளை
ஒரு கல்லா
தீண்டாமை

கவிஞர் குமார்
தேனி






சந்தர்ப்ப கூட்டணி
ஜனநாயக சாவு
தேர்தல்

கவிஞர் பாலன்
புதுவை






வெற்றியை அடைவதற்கான‌
பயிற்சி
விடாமுயற்சி

கவிஞர் ஆனந்தஜோதி
தேனி






காலமெனும் சோலையில்
கவிஞனின் சிரிப்பு
கவிதை

- கவிஞர் செல்வராஜ்
தேனி







தொடர் போராட்டக்காரனின்
மூலதனம்
விடாமுயற்சி

- கவிஞர் ஜனசக்தி
தேனி






தேடுதல் வேட்டையில்
அரிதாய் கிடைக்கும்
சரியான ஹைக்கூ

- கவிஞர் சித்தை. பா. பார்த்திபன்
திண்டுக்கல்






சிறகுகள் சுகம்
சிலுவைகள் சுமை
சுகமும் சுமையும்
சுற்றிச்சுழலும்
சக்கரமே வாழ்க்கை

கவிஞர் யாழினி
கோவை






விரல் தேடும் விஞ்ஞானம
நாகரிக புரட்சி
கணினி

- கவிஞர் காமராஜன்
திண்டுக்கல்






*  மலர்ந்த பூக்கள்
விலைபோகவில்லை
முதிர்கன்னிகள்

- கவிஞர் சுபத்ரா
சேலம்







* விடிய விடிய பெய்த மழை
விடிந்த பின்னும் தொடர்கிறது
ஒழுகும் குடிசை

* உத்தமர்கள் தான்
எல்லோரும்
உறங்கும்போது

- கவிஞர் இளையராஜா
கடலூர்




அசைந்து வரும்
அன்புக்கோயில்
அம்மா

கவிஞர் மல்லிகா
தஞ்சாவூர்

* விழி இழந்தபோதும்
விளக்கானது
விவேகம்


* சிந்தனை சிறகானால்
சிகரமும்
சுலபமான தூரத்தில் தான்.

-கவிஞர் இந்துமதி
காஞ்சிபுரம்