வெற்றித் தோல்விகளின்
கூட்டுக்கலவை
வாழ்க்கை
- கவிஞர் மல்லிகா
அண்டம் சுருக்கி
அணுவுள் புகுத்தும்
முயற்சி
ஹைக்கூ பிரசவம்
- கவிஞர் சுமதி
சாதிக்கத் துடிப்பவனுக்கு
சாட்டை அடி
வறுமை
- கவிஞர் மாரிமுத்து
ஈர்ப்புவிசை
புரிந்தது
உன் கண்களில்
- கவிஞர் மாரியம்மாள்
அழிவின் தூண்டுகோல்
ஆக்கத்தின்
நெம்புகோல்
அறிவியல்
- கவிஞர் ஜனசக்தி
No comments:
Post a Comment