Saturday 16 March 2013






கண் இருந்தும்
வெளிச்சம் இல்லை
கல்லாமை

-    கவிஞர் மாரிமுத்து

முத்தத்தில் தொடங்கி
முத்தத்தில் முடியும்
குழந்தை மொழி

-    கவிஞர் துளிர்

நவீனகால
மத்தாப்பு
கொசு மட்டை

-    கவிஞர் நியூட்டன்

எதுவும் முடியுமெனும்
உண்மையை உணர்தல்
சாதனை

-    கவிஞர் ஆனந்த ஜோதி

தள்ளாடும் இளமை
அவிழும் மானம்
மதுப்பழக்கம்

-    கவிஞர் கவித்துளி குமார்

ஒவ்வொரு வீட்டிலும்
கடவுளின் நடமாட்டம்
அம்மாக்கள்

-    கவிஞர் சுதாகர்

வாடும் மனதை
வருடும் சங்கீதம்
மழலை மொழி

-    கவிஞர் யாழினி

உலகின் துயர் களைய
உனை நீ பயிர்செய்
அன்பெனும் நிலத்தில்

-    கவிஞர் முனியசாமி


ஏறும் விலைவாசி
இறங்கும் சம்பளம்
பரமபத வாழ்க்கை

பள்ளிகளில் தொலைந்த
நீதி போதனையின் விளைவு
பற்றி எரிகிறது நாடு

-    கவிஞர் ஏகலைவன்

இருப்புக் கொள்ளவில்லை
பேருந்து இருக்கையில்
சில்லரை பாக்கி

-    கவிஞர் இளையராஜா


சாலையில் வேண்டாம்
மருத்துவமனையில் செய்யுங்கள்
ரத்த தானம்

-    கவிஞர் சந்திரன்

இதயங்களை
ஆட்டி வைக்கும்
இதமான சொற்கள்

-    கவிஞர் தவப்புதல்வன்

உடல் முழுதும் குறை
மனம் முழுதும் நம்பிக்கை
மாற்றுத்திறனாளி

-    கவிஞர் கவித்துளி குமார்

உலகமே வெறுத்தாலும்
உனக்கான ஆறுதல்
தன்னம்பிக்கை

-    கவிஞர் கிருஷ்ணன்


Sunday 17 February 2013



வெற்றித் தோல்விகளின்
கூட்டுக்கலவை
வாழ்க்கை
-    கவிஞர் மல்லிகா

அண்டம் சுருக்கி
அணுவுள் புகுத்தும் முயற்சி
ஹைக்கூ பிரசவம்
-    கவிஞர் சுமதி

சாதிக்கத் துடிப்பவனுக்கு
சாட்டை அடி
வறுமை
-    கவிஞர் மாரிமுத்து

ஈர்ப்புவிசை
புரிந்தது
உன் கண்களில்
-    கவிஞர் மாரியம்மாள்

அழிவின் தூண்டுகோல்
ஆக்கத்தின் நெம்புகோல்
அறிவியல்
-    கவிஞர் ஜனசக்தி



சமூக நலன்
சத்தியக் காவலாளி
எழுத்தாளன்

பிளாஸ்டிக் கழிவுகள்
காயப்படுகிறாள்
பூமித்தாய்

ஒருபக்கம் குடிபோதை
மறுபக்கம் இலவச போதை
பாவம் மக்கள்

பூக்கள் மட்டுமல்ல
பூகம்பமும் முளைக்கும்
காதல்
கவிஞர் ஏகலைவன்

இளைப்பாற நிழலின்றி
நிற்கும் மரங்கள்
வெப்பம்
-    கவிஞர் காமராஜ்

சான்றிதழில் 14
உணவு விடுதியில் 16
குழந்தைத் தொழிலாளி
-    கவிஞர் தில் பாரதி

பாலித்தீன் பயன்படுத்தாதீர்
கண்ணீர் கொட்டுகிறது
அருவி
-    கவிஞர் சண்முகப்ரியன்

உருவம் பார்த்து
வராது
வெற்றியும் தோல்வியும்
-    கவிஞர் இந்துமதி

சாதி இரண்டொழிய வேறில்லை
தெரிந்துக் கொண்டேன்
சாதிவாரி கணக்கெடுப்பு
-    கவிஞர் தகடூர் செவ்வியன்




பெளர்ணமியில்
இரட்டை ரோஜா
உன் உதடுகள்
-    கவிஞர் கவி பெரியசாமி

தற்காலிக பூங்கா
குழந்தைகளுக்கு
திருவிழா பொம்மைக் கடை
-    கவிஞர் முருகேசன்

விரைவுப் பயணம்
அபாய சங்கு
பையில் செல்போன்
-    கவிஞர் கவித்துளி குமார்

மாசற்ற உலகு
மடிந்து போகிறது
மரங்களின் இழப்பு
-    கவிஞர் வேம்பை பாலாஜி

புள்ளிகள் இல்லை
கோலம் மட்டும்
மின்னல்

விரல்நுனி
வேகம் விவேகம்
குறுஞ்செய்தி
-    கவிஞர் புதுவை பாலன்